தொடர் குண்டுவெடிப்புகள் : எங்கே தலைமை ?

May 17, 2008

வருடா வருடம் குறைந்தது முன்று அல்லது நான்கு தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. புதிதாக அரசு செய்யபோவது என்ன?

மத்திய அரசின் குழப்பமான நிலைபாடும், எதிர்வினைகளும் கவலை அளிக்கின்றன.

தீவிரவாத்தால் பாதிக்கபட்ட நாடுகளில் எல்லாம் கடுமையான சட்டங்கள் இயற்றபட்டுள்ளன. இங்கே இன்னும் தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டம் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் முடியாமல் தொடர்கிறது. மன்மோகன் சிங் அரசின் முதல் கொள்கை முடிவுகளில் ஒன்று முந்தைய அரசு கொண்டுவந்த ‘போடா’ சட்டத்தை வாபஸ்பெற்றது. இருந்த சட்டங்களே போதுமானது என்று கூறிவந்த காங்கிரஸ் தேசிய பாதுகாப்பு சட்டத்தை திருத்தலாமா என்று யோசிக்கிறது.

கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். இத்தனை உயிர்கள் பலியான பின்னர் தான் புத்தி வருகிறது.

அரசின் உயர்மட்ட அளவில் தீவிரவாத்தை எதிர்க்கும் திரானி இல்லாத நிலையில் உளவுநிறுவனங்களும், பாதுகாப்பு படைகளும் அதே போல ஆகிவிடுவது இயற்கை. தெளிவான பார்வையுடன், தைரியமாக தீவிரவாதத்தை எதிர்க்க அரசியல் தலைமை முன்வராத வரையில் அரசு இயந்திரும் மெதுவாக தான் இயங்கும்.

தலைமையின் தயக்கமே தீவிரவாதத்தின் வெற்றி.


சக்தி-98 : பத்து ஆண்டுகள் கழித்து….

May 14, 2008

1998ஆம் ஆண்டு ஆப்ரேஷன் சக்தி நடந்தேறிய போது ஆர்மி தளபதியாக இருந்த வி.பி.மாலிக் இன்னும் நிறைவேற்ற வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுள்ளார்.

சோதனை நடந்ததில் இருந்து டி.ஆர்.டி.ஓ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்தஅணுகுண்டுகளின் நம்பகதன்மை பற்றிய கேள்விகள் எழுப்பபட்டு வந்திருகின்றன. முப்படைகளுக்கு நாட்டின் வசமுள்ள அணு-ஆயுதங்களை பற்றிய முழுமையான அறிமுகம் அளிக்கபடவில்லை.

ஆயுதங்களை டெலிவரி செய்யும் வாகனங்களான ஏவுகனைகள் அடிக்கடி சோதனை செய்யபட்டு வந்தாலும் சமீபத்தில் முன்னால் விமானபடை தளபதி ஆஸ்தானா இன்னும் ஏவுகனைகளைவிட விமானங்களையே படைகள் அதிகம் நம்புவதாக தெரிவிக்கிறார்.

அணுகுண்டு சம்பந்தமான நடவெடிக்கைகளுக்கு முப்படைகளும் கூட்டாக ஒரு தலைமை அமைக்கபட்டுள்ளது. இதுவரை அந்த தலைமை அணுகுண்டு சம்பந்தமான மற்ற அமைப்புகளுடன் ஒருங்கினைப்பை ஏற்படுத்த எதும் நடவெடுக்கை எடுத்ததாக தெரியவில்லை.

பாரத அணுகொள்கை 1999ஆம் ஆண்டு அறிவிக்கபட்டபோதும் அதை இன்னும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.

முன்று நிலைகளில் இருந்து அணுகுண்டு டெலிவரி செய்ய அணுகொள்கை அனுமதித்தாலும் இன்னும் விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை மட்டும் தான் படையில் சேர்க்க முடிந்துள்ளது. ஏவுகனைகளின் பற்றி படைகளின் நிலை முன்னமே குறிப்பிடபட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து நீண்ட தூரம் பாயும் ஏவுகனைகளை செலுத்தும் தொழில்நுட்பம் இன்னும் நடைமுறைபடுத்தபடவில்லை.

அடுத்து தளபது சந்தேகபடுவது அரசியல் தலைமையின் முதிர்ச்சியை.

சக்தி சோதனைகளை நடத்திகாட்டிய கலாம், சிதம்பரம் மற்றும் பிரிஜேஷ் மிஷ்ரா ஆகியோர் ஆதரவு தெரிவித்தபின்னரும் அரசியல் தலைமையால் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றிய ஒருமித்து கருத்துக்கு வரை இயலவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாயந்த விசயங்களுக்கு இன்னும் கொஞ்சம் அக்கறையெடுத்து காய்நகர்த்த தலைமை தயாராக இருத்தல் வேண்டும். சீன, அமெரிக்க நெருக்கடிகளுக்கு பனியாமல் ஏவுகனை மற்றும் அணுகுண்டு சோதனைகளை முழுமையாக நடத்தி படைகளிடம் ஒப்படைக்கபடவேண்டும்.

அணுகுண்டு சோதனை நடந்த பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அரசியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் பொறுப்பு இன்னும் தீரவில்லை. இனிமேல் தான்  அதிகமாகிறது.


யுரேனியம் : கன்கெட்ட பின்னர் சூர்யநமஸ்காரம்

May 13, 2008

1990களில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த பொழுது கடும் பொருளாதார நெருக்கடி காரனமாக பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் நிதி ஒத்துக்கீடு பெரும் அளவு குறைக்கபட்டது.

அந்த நிதி குறைப்பின் பாதிப்பை இப்போது உனரமுடிகிறது.

யுரேனிய பற்றாகுறை காரனமாக அணு உலைகள் 50% திறனுக்கு மட்டுமே இயக்கபட்டு வருகின்றன. 1990களில் மன்மோகன் சிங் யுரேனிய சுரங்கங்கள் அமைக்க நிதி ஒத்துக்காமல் போக இன்று யுரேனிய பற்றாகுறை ஏற்பட்டு இருக்கிறது.பல ஆயிரம் கோடிகள் முதலீட்டில் நிறுவபட்ட உலைகள் முழுமையாக உபயோகிக்க முடியவில்லை.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட யுரேனிய பற்றாகுறையும் ஒரு காரனம் என்று அரசு சொல்கிறது. ஆனால் பற்றாகுறை ஏற்பட மன்மோகன் சிங்கும் ஒரு காரனம். அதை பிரதமர் உனர்ந்துவிட்டாரா?

உள்நாட்டு திறன்களையும் வளங்களையும் சரியாக பயன்படுத்தாமல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மட்டும் போடுவது நன்றல்ல.


போக்ரான் : ஐக்கிய பிற்போக்கு கூட்டனி

May 10, 2008

சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டனிஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பாரத அரசு 1998ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அணுகுண்டு சோதனையை பற்றி பெருமைகொள்வதில்லை, அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்வதில்லை.

அணுகுண்டு சோதனைகளுக்கு பிறகு பாரதம் மீது விதிக்கபட்ட கட்டுபாடுகளையும் பொருளாதார தடைகளையும் சுட்டிகாட்டி இவைகளை கொண்டாடி தான் தீர வேண்டுமா என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கேட்கிறார்.

தடைகளையும் கட்டுபாடுகளை கடந்த பத்து ஆண்டுகளில் நாடு களைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி ஒன்பது சதவீகிதத்தை எட்டியுள்ளது. சக்தி சோதனைகள் எந்தவகையிலும் நாட்டின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கவில்லை.

அணுகுண்டு சோதனைகள் தேச எல்லைகளின் பாதுகாப்பை நிச்சயபடுத்திய நிகழ்வு. ஆயிரம் ஆண்டுகள் அன்னியரின் படையெடுப்பை எதிர்த்து போராடிய, போராடிகொண்டிருக்கும் தொன்மையான ஒரு நாகரீகத்தின் பிரம்மாஸ்த்திரம்.

இந்தியா சக்தி-98 சோதனைகளை கொண்டாடாமல் இருப்பது இமாலய தவறு.


புதிய ஆயுதங்கள், பழைய பிரச்சனைகள்

May 9, 2008

விமானபடையில் புதிதாக சேர்க்கபட்ட ஹாக் அதிவேக ஜெட் பயிற்சி விமானங்களில் ஒன்று விபத்துள்ளானது.பிரிட்டனில் இருந்து இந்தவகை விமானங்கள் நூற்றுக்கும் அதிகமாக வாங்கபடுகின்றன.

கடந்த ஃபிப்ரவரி மாதம் தான் முதல் பத்து விமானங்கள் டெலிவரி செய்யபட்டன. ஹாக் விமானங்கள் படையில் இனைக்கபட்ட பின்னரும் உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்சனைகள் காரனமாக இயக்கபடாமல் இருந்துவந்தனவாம்.

Airliners.net)

இந்த விபத்துக்கு காரனம் விமானத்தில் பழைய/தரம்குறைந்த உதிரிபாகங்கள் பொருத்தபட்டது தான் என்று விமானபடை குற்றம்சாட்டுவதாக தெரிகிறது. குறிப்பிட்ட பாகங்கள் சில துருப்பிடித்து இருந்தன என்றும் விமானபடை பிரிட்டன் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வாங்கபட்ட தளவாடங்களில் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே மிக்-29 விமானங்களை வாங்கியபோதும் நிறைய விமானங்களை உதிரிபாகங்கள் கிடைக்காத காரனத்தால் இயக்கமுடியாமல் விமானபடை தவித்து வந்தது.

சமீபத்திய உதாரனமாக விமானபடையின் பெருமை என்று கருதபடும் சுக்ஹோய்-30 விமானங்கள் சில காலம் இயக்கமுடியாமல் போனது. ரஷ்யாவில் இருந்து டயர்(tyres) சப்ளையில் பிரச்சனையால் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானங்களை கொஞ்ச காலத்துக்கு இயக்க முடியவில்லை.

வெளியே இருந்து ஆயுத கொள்முதல் செய்துவிட்டு தவிப்பது விமானபடை மட்டுமல்ல். கடற்படை மற்றும் ஆர்மியும் இதே போன்ற தொல்லைகளால பாதிக்கபட்டுள்ளன.

கடற்படை தள்வார்(Talwar) ரக கப்பல்களை ஆர்டர் செய்துவிட்டு முழுதாக ஒரு வருட தாமதமாக டெலிவரி வாங்கியது. கப்பல்களில் பொருத்தபட்ட கிளப்(Klub) ஏவுகனையில் பிரச்சனை தான் காரனம் என்று அறிவிக்கபட்டது. பின்னர் வாங்கிய அட்மிரல் கோர்ஷ்கோவ்(இப்போது ஐ.என்.எஸ்.விக்கிரமாதித்யா) சுத்தமாக முன்ற-நான்கு வருட தாமதத்துக்கு பின்னர் தான் டெலிவரி கொடுக்க முடியும் என்று ரஷ்யா தெரிவித்துவிட்டது. அதுவும் பேசிய தொகையில் இருந்து கனிசமான அளவு அதிகாக கொடுத்தால் யோசிக்க முடியும் என்ற கட்டாயத்துடன்.

வெளிநாட்டில் இருந்து வாங்கபடும் ஒவ்வொரு தளவாடமும் பின்னால் அனுமார் வாலை போன்று பிரச்சனைகளுடன் தான் வந்து சேருகின்றன. இவைகளுக்கு இருபது வருடங்களுக்கு உதிரிபாக சப்ளை தேவைபடுகிறது. டயர்களில் ஆரம்பித்து சிறிய oil sealகளை வரை வெளியில் இருந்து வாங்கி தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் படைகள் தள்ளபடுகின்றன.

நம்பகம் இல்லாத வியாபாரிகளிடம் நாட்டின் 70 சதவீத தளவாடங்களை கொள்முட்தல் செய்வது நாட்டின் பாதுகாப்பையே வெளிநாட்டில் அடகு வைக்கபதற்க்கு ஒப்பான ஒன்று.

இந்திய ஆயுத உற்பத்தி துறையோ இப்போது தான் துளிர்விட்டு கொண்டிருக்கிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமே ஆயுத உற்பத்தி செய்ய முடியும் என்ற கட்டுபாடுகள் தளர்த்தபட்டுள்ளன.இன்னும் இருபது வருட காலம் படைகள் வெளிநாட்டு ஆயுத வியாபரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் தான்.