போக்ரான் : ஐக்கிய பிற்போக்கு கூட்டனி

சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டனிஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பாரத அரசு 1998ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அணுகுண்டு சோதனையை பற்றி பெருமைகொள்வதில்லை, அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்வதில்லை.

அணுகுண்டு சோதனைகளுக்கு பிறகு பாரதம் மீது விதிக்கபட்ட கட்டுபாடுகளையும் பொருளாதார தடைகளையும் சுட்டிகாட்டி இவைகளை கொண்டாடி தான் தீர வேண்டுமா என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கேட்கிறார்.

தடைகளையும் கட்டுபாடுகளை கடந்த பத்து ஆண்டுகளில் நாடு களைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி ஒன்பது சதவீகிதத்தை எட்டியுள்ளது. சக்தி சோதனைகள் எந்தவகையிலும் நாட்டின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கவில்லை.

அணுகுண்டு சோதனைகள் தேச எல்லைகளின் பாதுகாப்பை நிச்சயபடுத்திய நிகழ்வு. ஆயிரம் ஆண்டுகள் அன்னியரின் படையெடுப்பை எதிர்த்து போராடிய, போராடிகொண்டிருக்கும் தொன்மையான ஒரு நாகரீகத்தின் பிரம்மாஸ்த்திரம்.

இந்தியா சக்தி-98 சோதனைகளை கொண்டாடாமல் இருப்பது இமாலய தவறு.

Leave a comment