சக்தி-98 : பத்து ஆண்டுகள் கழித்து….

1998ஆம் ஆண்டு ஆப்ரேஷன் சக்தி நடந்தேறிய போது ஆர்மி தளபதியாக இருந்த வி.பி.மாலிக் இன்னும் நிறைவேற்ற வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுள்ளார்.

சோதனை நடந்ததில் இருந்து டி.ஆர்.டி.ஓ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்தஅணுகுண்டுகளின் நம்பகதன்மை பற்றிய கேள்விகள் எழுப்பபட்டு வந்திருகின்றன. முப்படைகளுக்கு நாட்டின் வசமுள்ள அணு-ஆயுதங்களை பற்றிய முழுமையான அறிமுகம் அளிக்கபடவில்லை.

ஆயுதங்களை டெலிவரி செய்யும் வாகனங்களான ஏவுகனைகள் அடிக்கடி சோதனை செய்யபட்டு வந்தாலும் சமீபத்தில் முன்னால் விமானபடை தளபதி ஆஸ்தானா இன்னும் ஏவுகனைகளைவிட விமானங்களையே படைகள் அதிகம் நம்புவதாக தெரிவிக்கிறார்.

அணுகுண்டு சம்பந்தமான நடவெடிக்கைகளுக்கு முப்படைகளும் கூட்டாக ஒரு தலைமை அமைக்கபட்டுள்ளது. இதுவரை அந்த தலைமை அணுகுண்டு சம்பந்தமான மற்ற அமைப்புகளுடன் ஒருங்கினைப்பை ஏற்படுத்த எதும் நடவெடுக்கை எடுத்ததாக தெரியவில்லை.

பாரத அணுகொள்கை 1999ஆம் ஆண்டு அறிவிக்கபட்டபோதும் அதை இன்னும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.

முன்று நிலைகளில் இருந்து அணுகுண்டு டெலிவரி செய்ய அணுகொள்கை அனுமதித்தாலும் இன்னும் விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை மட்டும் தான் படையில் சேர்க்க முடிந்துள்ளது. ஏவுகனைகளின் பற்றி படைகளின் நிலை முன்னமே குறிப்பிடபட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து நீண்ட தூரம் பாயும் ஏவுகனைகளை செலுத்தும் தொழில்நுட்பம் இன்னும் நடைமுறைபடுத்தபடவில்லை.

அடுத்து தளபது சந்தேகபடுவது அரசியல் தலைமையின் முதிர்ச்சியை.

சக்தி சோதனைகளை நடத்திகாட்டிய கலாம், சிதம்பரம் மற்றும் பிரிஜேஷ் மிஷ்ரா ஆகியோர் ஆதரவு தெரிவித்தபின்னரும் அரசியல் தலைமையால் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றிய ஒருமித்து கருத்துக்கு வரை இயலவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாயந்த விசயங்களுக்கு இன்னும் கொஞ்சம் அக்கறையெடுத்து காய்நகர்த்த தலைமை தயாராக இருத்தல் வேண்டும். சீன, அமெரிக்க நெருக்கடிகளுக்கு பனியாமல் ஏவுகனை மற்றும் அணுகுண்டு சோதனைகளை முழுமையாக நடத்தி படைகளிடம் ஒப்படைக்கபடவேண்டும்.

அணுகுண்டு சோதனை நடந்த பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அரசியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் பொறுப்பு இன்னும் தீரவில்லை. இனிமேல் தான்  அதிகமாகிறது.

Leave a comment